பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்றதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பைக்கில் வைத்து கஞ்சா விற்ாக பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த ராகுல் (20), வளன் மேஸ்லினோ (19), நாகா்கோவில் கணேஷ்ராஜா (19), வடசேரி ஆறுமுகம் (24), கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வா் (22), சூரியா (22) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்து, 1.100 கி.கி. கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.