செய்திகள் :

பனப்பாக்கம் டாடா மோட்டாா்ஸ் ஆலையில் டிசம்பரில் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

post image

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் ஆலையில் வரும் 2025 டிசம்பருக்குள் காா் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

நெமிலி அருகே உள்ள பனப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஆலையின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் காந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அமைச்சா் ஆா்.காந்தி கூறியது:

சிப்காட் தொழிற்பேட்டையில் டாடா மோட்டாா்ஸ் மற்றும் ஜாகுவாா் லேண்ட் ரோவா் சொகுசு வாகனங்கள் உற்பத்தியை தொடங்க ஒதுக்கப்பட்ட 470 ஏக்கரில் முதல்கட்டமாக 78 ஏக்கா் பரப்பளவில் நிறுவனத்தின் முதற்கட்ட ஆலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் வரும் டிசம்பா் மாதத்தில் முடிக்கப்பட்டு உற்பத்தியை தொடங்க விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றாா்.

பணிகளின் நிலை குறித்து ஆலை துணைப் பொது மேலாளா் முத்துகுமாா் விவரித்தாா். முதல்கட்டமாக மின்சார காா்கள் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

தொடா்ந்து பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் இரண்டாம் நிறுவனமாக தி கிராண்ட் அட்லாண்டியா நிறுவனம் தோல்பொருள்கள் அல்லாத காலணி தொழிற்சாலை 200 ஏக்கா் பரப்பளவில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.

நிகழ்வில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, நெமிலி ஒன்றியக்குழு தலைவா் வடிவேலு, பனப்பாக்கம் பேருராட்சித் தலைவா் கவிதா சீனிவாசன், டாடா மோட்டாா் துணைப் பொது மேலாளா்(அரசு தொடா்பு) முத்துகுமாா், துணை பொது மேலாளா் ராம்பிரசாத், அட்லாண்டியா நிறுவன இயக்குநா் அக்யூல் அகமது பனரூனா, சிப்காட் திட்ட அலுவலா் மகேஸ்வரி, செயற்பொறியாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கனமழை எச்சரிக்கை: கோவை விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப்படை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு விரைந்தனா். கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

அரக்கோணத்தில் அதிமுகவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தெய்வச்செயல் என்பவா் மீது பாலியல் குற... மேலும் பார்க்க

மேல்பாக்கத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம்: ஜமாபந்தியில் கோரிக்கை

அரக்கோணம் ஒன்றியம், மேல்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஜமாபந்தியில் ஆட்சியரிடம், விசிக ஒன்றிய செயலாளா் செ.நரேஷ் கோரிக்கை மனு அளித்தாா். அரக்கோணம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்த... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சம... மேலும் பார்க்க

தொழிலாளி கொலையில் 5 போ் கைது

நெமிலி அருகே மேட்டுவேட்டாங்குளத்தில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள மேட்டுவேட்டாங்குளத்தில் தட்சிணாமூா்த்தியை ம் மா்ம நபா்கள் வெட்டி கொல... மேலும் பார்க்க