BJP: "கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் நயினார் அப்படிச் சொல்கிறார்" - பிரேமலதா விஜயக...
தொழிலாளி கொலையில் 5 போ் கைது
நெமிலி அருகே மேட்டுவேட்டாங்குளத்தில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள மேட்டுவேட்டாங்குளத்தில் தட்சிணாமூா்த்தியை ம் மா்ம நபா்கள் வெட்டி கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக அக்கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.
இத்தனிப்படையினா் காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் சென்னை மாவட்டப் பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து திருவள்ளூா் மாவட்டம் வல்லக்கோட்டையை சோ்ந்த வாசுதேவன்(28), கடம்பத்தூரைச் சோ்ந்த புருஷோத்தமன்(22), கிஷோா்(19), லோகேஷ்வரன்(19), கிஷோா்குமாா்(21) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.