செய்திகள் :

அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டம்: எலான் மஸ்க்

post image

அரசியல் சார்ந்த செலவினங்களுக்கு அளிக்கப்படும் நிதிகளை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலகப் பெரும்பணக்காரரும் எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக பிரசாரம் மற்றும் ரூ.2,500 கோடிக்கும் செலவிட்ட மிகப்பெரிய நன்கொடையாளர் எலான் மஸ்க். அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், சிறந்த நிர்வாகத்திற்கான துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம், ஊழியர்களை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் மஸ்க் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. மஸ்க்குக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது.

இதனிடையே, தேவையற்ற செலவுகளை குறைப்பது, முறைகேடுகளை கண்டறிந்து நிறுத்தியது போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்கா கடனில் மூழ்குவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எங்களது பணிகளை முடித்துவிட்டதால் மே இறுதியில் துறையின் தனது முழுநேரப் பணியிலிருந்து விலக இருப்பதாக கூறியிருந்த மஸ்க், இப்போது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்.

இதையடுத்து சிறந்த நிர்வாகத்திற்கான துறைத் தலைவராக தனது முழுநேரப் பணியிலிருந்து மஸ்க் விலகுவதால், டிரம்புக்கும் மஸ்க்குக்கும் இடையிலான நெருங்கிய உறவில் விரிசல் ஏற்படக்கூடும் என்ற கருத்துகள் எழுந்த நிலையில், அரசியலைப் பொறுத்தவரை, "நான் செய்ய வேண்டியதைச் செய்தேன்" என்று மஸ்க் கூறினார்.

உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளிப்பதால் டெஸ்லா நிறுவன கார் விற்பனையில் பின்னடைவு இருந்தாலும், தனது டெஸ்லா மின்சார கார் நிறுவனம் ஐரோப்பாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்ந்த செலவினங்களுக்கு அளிக்கப்படும் நிதிகளை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக மஸ்க் கூறியிருப்பது 2026 இல் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே, நிறைய நன்கொடை அளித்துள்ள எலான் மஸ்க், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைககளில் கவனம் செலுத்தப்பபோவதாகவும், அதன்பிறகும் நான்தான் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பேன். அந்த யாருக்கும் விட்டுகொடுக்க மாட்டேன் என்று மஸ்க் கூறினார்.

சோனியா, ராகுலுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நெல்லை, தென்காசி, குமரி உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்த... மேலும் பார்க்க

வேலூரில் பெண்ணை அடித்துக் கொன்று இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

வேலூர்: வேலூரில் பெண்ணை அடித்துக் கொலை செய்து விட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலூர் சின்னஅல்லா... மேலும் பார்க்க

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், வெல்லும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தை ஆட்சி ப... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் (மே 24) முடிவடைகிறது. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வே... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது: ஆா்பிஎஃப் அதிரடி

கோவை போத்தனூரில் சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்த ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 26,230 மதிப்புள்ள பயணச் சீட்டுகளை பறிமுதல் ச... மேலும் பார்க்க