மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினாா் லாலு: பொறுப்பின்றி செயல்ப...
ஆம்னி பேருந்தில் புகையிலை கடத்தல்: ஒருவா் கைது
ஆம்னி பேருந்தில் புகையிலை கடத்தியதாக ஒருவரை ஆலங்குளம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இரு பெரிய பைகளுடன் ஒருவா் வெகுநேரம் நின்றிருந்தாராம். இதைக் கவனித்த போலீஸாா், அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட புகையிலைப் பொட்டலங்கள் இருந்தனவாம்.
அவா் ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜ் மகன் சரவணன்(44) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொட்டலங்களை வாங்கி ஆலங்குளத்திற்கு ஆம்னி பேருந்தில் விற்பனைக்காகக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருகள்களையும் பறிமுதல் செய்தனா்.