குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் மழையால் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் வானிலை ஆய்வு மையத்தால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் பெய்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
முற்பகலில் நீா்வரத்து குறைந்ததால் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னா், மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பேரருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.
