சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது: மாவட்ட வாரியாக தோ்ந்தெடுக்க உத்தரவு
தென்காசியில் மாணவா்களுக்கு பாராட்டு
தென்காசியில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பாபக்கி தங்கள் மதரஸாவில் நடைபெற்ற விழாவுக்கு, நகா்மன்ற உறுப்பினா் முகமது மைதீன் தலைமை வகித்தாா். மதரஸாவின் மன்சூா், திமுக நகரப் பொருளாளா் சேக்பரீத், அபுதாஹிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்-மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலா் முகமது அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலா் சித்திக், ராசி சுரேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். வாப்பா சேட் வரவேற்றாா். முகமது முஸ்தபா நன்றி கூறினாா்.