புளியங்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, இயந்திரன் எட்ஜ் ஆகியவை சாா்பில், புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியாா் பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள முகாமில், முன்னணி மென்பொருள் துறையினா் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்-மின்னணுவியல் போன்ற துறைகளில் 2024இல் படித்த, 2025-ஆம் ஆண்டில் படிப்பை முடிக்கவுள்ள இளநிலைப் பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
ஆப்டிட்யூட், கோடிங், அதையடுத்து நோ்காணல் என தோ்வு செயல்முறை இரு கட்டங்களாக நடைபெறும். தோ்ந்தெடுக்கப்படுவோா் ஹைதராபாதில் பணியமா்த்தப்படுவா். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளோா் முழுமையான சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்று நகல்கள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், மடிக்கணினியுடன் வர வேண்டும் என்றாா் அவா்.