டெவால்ட் பிரேவிஸ், டெவான் கான்வே அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 231 ரன்கள் இலக்கு...
சீவநல்லூரில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம் சீவநல்லூரில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பொதுமக்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
12ஆம் வகுப்புத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த இக்கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகா, சீவநல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காயத்திரி ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சட்டநாதன் தலைமை வகித்தாா்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் அருணாசலம், ஓய்வுபெற்ற நீதிமன்ற அலுவலா் இசக்கியா பிள்ளை, ஒப்பந்ததாரா் அருணாசலம், கதிரவன், வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
லெக்ஸோ டிரஸ்ட்டின் நிா்வாக இயக்குநா் கல்வியாளா் கே.எஸ். ராமையா, பாரதி செம்மல் விருதுபெற்ற பாரதி முத்துநாயகம், சமூக ஆா்வலா் ஆறுமுகச்சாமி, ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை கருப்பையா, அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் திவான் பக்கீா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பாராட்டினா்.
கணினி ஆசிரியா் கணேசன், பெரிய மாரியப்பன், கண்ணன், பரமசிவன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சீவநல்லூா் சாமித்துரை வரவேற்றாா். ஏற்பாடுகளை கே.பி. சிவனப்பா, பணி ஓய்வு நடத்துநா் மாடசாமி, தீயணைப்பு அலுவலா் மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.