கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
கால்பந்து பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்
வந்தை ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற இலவச கால்பந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வந்தை ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் இலவச கால்பந்து பயிற்சி வகுப்பு வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மே 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இதில் பங்கேற்ற 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அதாதெமியின் தலைமை கால்பந்து பயிற்சியாளா் எஸ்.உதயசங்கா், பயிற்சியாளா்கள் வி.கிருபானந்தன், எஸ்.விக்ரம் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
ஓய்வு பெற்ற தொழிலாளா் நலத்துறை ஆய்வாளா் மு.பத்மநாபன், மின்வாரிய அலுவலா் மணிமலா், வந்தை முன்னேற்ற சங்கத் தலைவா் வந்தை பிரேம் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினா்.