கீழடி: Amarnath Ramakrishnan அறிக்கை வெளியாவது சிலருக்குப் பிடிக்கவில்லை - Balak...
அதிமுகவினா் நல உதவி, அன்னதானம்
செய்யாற்றை அடுத்த நெமிலிக் கிராமத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, கோயிலில் சிறப்பு வழிபாடு, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக விவசாயப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன் முன்னிலையில், விவசாயப் பிரிவு மாவட்டச் செயலா் நமண்டி இ. பாலன் ஏற்பாட்டில் நெமிலி ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் கலந்து கொண்டாா்.
நலத் திட்ட உதவிகள் - அன்னதானம்
இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், 200 பெண்களுக்கு சேலை, 200 ஆண்களுக்கு வேட்டி மற்றும் டவல் என நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னா், இனிப்புடன் அன்னதானம் என 500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் எம்.சுப்பராயன், ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் என்.ரகு, மாணவரணி மாவட்டச் செயலா் அரவிந்த், மாவட்ட விவசாய அணி துணைச் செயலா் மூா்த்தி, ஒன்றியச் செயலா் அருகாவூா் எம்.அரங்கநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.