குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை
SRH vs KKR: "சில நேரங்களில் எனக்கு நானே நிறைய சவால் விடுவேன்" - ஆட்ட நாயகன் கிளாசன்
ஹைதராபாத் vs கொல்கத்தா ஐபிஎல் நேற்று (மே 25) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கிளாசனின் சதம் மற்றும் ஹெட்டின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் இந்த சீசனை நிறைவு செய்தது ஹைதராபாத். ஆட்ட நாயகன் விருதை சதமடித்த கிளாசன் வென்றார்.
விருது வென்ற பிறகு பேசிய கிளாசன், "கடந்த மூன்று ஆட்டங்களாக நல்ல ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம். இந்த பிட்சில் ஸ்ட்ரைட்டில் பவுண்டரி லைன் 50 அல்லது 60 மீட்டர்தான் என்பதால், அங்கு அடிப்பதுதான் எங்களின் திட்டமாக இருந்தது. அதனால் நான் நேராக விளையாட விரும்பினேன். அதற்காக நிறைய பயிற்சி எடுத்திருக்கிறேன். சில நேரங்களில் எனக்கு நானே நிறைய சவால் விடுவேன்.

உங்களால் என்ன முடியும், என்ன முடியாது என நீங்கள் வளர்வதற்கான ஒருபகுதிதான் அது. எப்போதும் சீக்கிரமாகவே விக்கெட்டுகளை நாங்கள் இழந்துவிடுவோம். ஆனால், இன்று தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அதனால் நான் முன்வரிசையில் இறங்கினேன். பொதுவாக பவர்பிளே முடிந்து 7-வது ஓவரில் இறங்குவதை நான் விரும்புவேன். சில சமயங்களில் அது க்ளிக் ஆகும். சில சமயங்களில் க்ளிக் ஆகாது." என்று கூறினார்.