கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
Hardik Pandya : 'நாங்க 5 கப் ஜெயிச்சிருக்கோம்; எங்களுக்கு அது தெரியும்!' - ஹர்திக் பாண்ட்யா பளிச்
'மும்பை தோல்வி!'
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தோல்விக்குப் பிறகு சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

'ஹர்திக் சொல்லும் காரணம்!'
ஹர்திக் பாண்ட்யா பேசியதாவது, 'பிட்ச்சை பார்க்கையில் நாங்கள் 20 ரன்களைக் குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். பேட்டிங்கில் நாங்கள் எங்கே தவறவிட்டோம் என ஆராய வேண்டும். நாங்கள் வெற்றிக்கோட்டை தாண்டும் வகையில் ஆடவில்லை. இரண்டாம் இன்னிங்ஸிலும் பிட்ச் அப்படியேத்தான் இருந்தது.
பஞ்சாப் பேட்டர்கள் சில நல்ல ஷாட்களை ஆடினார்கள். இந்த சீசன் முழுக்க நாங்கள் சிறப்பாக ஆடியிருக்கிறோம். இந்த நாள் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு ப்ளே ஆப்ஸூக்கு தயாராக வேண்டும். பௌலிங்கில் சீசன் முழுக்க சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம்

பேட்டிங்கில்தான் பிரச்னை இருக்கிறது. அதுவும் முதலில் பேட் செய்கையில் நாங்கள் என்ன வேகத்தில் ஆட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நாங்கள் 5 கோப்பைகளை வென்றிருக்கிறோம். நாம் கொஞ்சம் சறுக்கினாலும் மற்ற அணிகள் நம்மை பின்னுக்குத் தள்ளிவிட்டு வென்றுவிடுவார்கள் என தெரியும். நாங்கள் அஸ்வனி குமாரைத்தான் இம்பாக்ட் ப்ளேயராக எடுக்க நினைத்தோம். அவர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.' என்றார்.