Sikandar: இங்கிலாந்தில் டெஸ்ட்; பாகிஸ்தானில் T20 - 24 மணி நேரத்தில் சிக்கந்தர் ராசா செய்த சாகசம்
ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா இங்கிலாதில் டெஸ்ட் ஆடிவிட்டு, உடனே அங்கிருந்து அவசர அவசரமா புறப்பட்டு துபாய், அபுதாபி வழியாக லாகூர் வந்து பாகிஸ்தான் சூப்பர் லீகின் இறுதிப்போட்டியில் ஆடி லாகூர் அணியை வெல்ல வைத்திருக்கிறார். இந்த சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து Vs ஜிம்பாப்வே
இங்கிலாந்து- ஜிம்பாப்வே இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்திருந்தது. இது நான்கு நாட்களை மட்டுமே கொண்ட டெஸ்ட் போட்டி. இதில் இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேவை மூன்றாவது நாளிலேயே வீழ்தேதி போட்டியை வென்றுவிட்டது.
இதனால் நான்காவது நாள் ஆட்டம் நடைபெறவில்லை. கிடைத்த அந்த இடைவெளியில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா பாகிஸ்தான் சென்று அங்கு நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டியில் ஆடி லாகூர் அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.
இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி முடிந்ததும், அங்கிருந்து துபாய், துபாயிலிருந்து அபுதாபி, அபுதாபியிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு வந்திருக்கிறார்.
டாஸ் போட 10 நிமிடங்கள் இருக்கும்போதுதான் அவர் லாகூர் விமான நிலையத்தை வந்தடைந்திருக்கிறார்.
ஆனால் எப்படியும் சிக்கந்தர் ராசா வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரின் பெயரையும் லாகூர் அணி டாஸின் போது அணியில் சேர்த்துவிட்டார்கள்.

போட்டி ஆரம்பிக்கும் சமயத்தில் சரியாக வந்து களமிறங்கி அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.
7 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களை விளாசி 22 ரன்களை எடுத்து லாகூர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு வந்த பயணம் குறித்து பேசிய ராசா, “ இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 25 ஓவர்களை வீசியிருந்தேன். பேட்டிங்கிலும் 20 ஓவர்கள் ஆடினேன்.
பர்மிங்ஹாமில் இரவு உணவு எடுத்துக்கொண்டேன். துபாயில் காலை உணவு, அபுதாபியில் மதிய உணவு. பிறகு பாகிஸ்தானில் மீண்டும் இரவு உணவு.

இதுதான் தொழில்முறை கிரிக்கெட் வீரனின் வாழ்வு. இத்தகைய வாழ்வு எனக்குக் கிடைத்ததில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...