செய்திகள் :

Shreyas Iyer : 'ஜெயிச்சாதான் நம்புவாங்கன்னு எனக்கு தெரியும்!'- பஞ்சாபின் வெற்றி குறித்து ஸ்ரேயஸ்

post image

'பஞ்சாப் வெற்றி!'

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.

Shreyas Iyer
Shreyas Iyer

'ஜெயிக்கிறதுதான் லட்சியம் - ஸ்ரேயஸ் ஐயர்!'

ஸ்ரேயஸ் ஐயர் பேசியதாவது, 'முதல் போட்டியிலிருந்தே போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதை மட்டும்தான் எங்களின் ஒரே இலக்காக வைத்திருந்தோம். ஒவ்வொரு போட்டியிலும் சரியான சமயத்தில் ஒவ்வொரு வீரர்கள் முன் வந்து சிறப்பாக ஆடியிருந்தார்கள்

எங்களின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலும் ஆரோக்கியமானதாக இருக்கிறது. வீரர்களை நிர்வகிக்கும் வேலைகளையெல்லாம் ரிக்கி பாண்டிங் பார்த்துகொள்கிறார். நான் எல்லாருடைய நம்பிக்கையையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது. போட்டிகளை வெல்வதன் மூலம்தான் அதை சாதிக்க முடியும் என எனக்குத் தெரியும். ரிக்கி பாண்டிங்கும் நானும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாக பயணித்து வருகிறோம்.

Shreyas Iyer
Shreyas Iyer

நான் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதற்கான வெளியை அவர் ஏற்படுத்திக் கொடுக்கிறார். ஜாஷ் இங்லீஷ் புதிய பந்தில் ஆட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தார். அவர் முக்கியமான ஆட்டங்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர் என எங்களுக்குத் தெரியும். அவர் நிறைய பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என நாங்களும் விரும்பினோம். அதனால்தான் என்னுடைய ஆர்டரை மாற்றிக் கொண்டு அவரை நம்பர் 3 இல் இறக்கினோம்.' என்றார்.

CSK: 'நாங்க எதிர்பார்த்த சீசனா இது அமையல, ஆனா சென்னை ரசிகர்கள்...'- நெகிழ்ச்சியாக பேசிய பதிரனா

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்போது பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் ப... மேலும் பார்க்க

Shreyas Iyer: `கொல்கத்தாவில் ஸ்ரேயஸ் முதுகில் குத்தப்பட்டார்' - முன்னாள் இந்திய வீரர் ஓப்பன் டாக்

ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஓராண்டாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதோடல்லாமல், கேப்டன்சியில் சாதனை மேல் சாதனை படைத்தது வருகிறார்.கடந்த ஆண்டில் ஐபிஎல் கோப்பை உட்பட உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகள் அனைத்தையும... மேலும் பார்க்க

Jithesh Sharma: 'தினேஷ் கார்த்திக்தான் என்னோட குரு!' - ஆட்டநாயகன் ஜித்தேஷ் சர்மா

'பெங்களூரு வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெ... மேலும் பார்க்க

Rishabh Pant : 'ஜித்தேஷை அவுட் ஆக்கிய திக்வேஷ்; பெருந்தன்மை காட்டிய பண்ட்!' - என்ன நடந்தது?

'பெங்களூரு வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிர... மேலும் பார்க்க

LSG vs RCB : 'நாங்க வர்றோம்!' - RCB அணியை உச்சத்தில் அமர்த்திய ஜித்தேஷ்

'பெங்களூரு வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் டாப் 2 க்குள் நுழைந்திருக்கிறது பெங்களூரு அணி. இமாலய டார்கெட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா ஆகியோரின் அசத்தலான ஆட்ட... மேலும் பார்க்க

Priyank Panchal: "இனிமேல் எதுவும் நடக்காது என உணர்ந்துவிட்டேன்" - நிறைவேறா கனவுடன் விடைபெறும் வீரர்

இந்திய அணியில் இடம்பிடிக்கப் பல வருடமாகப் போராடிவந்த பிரியங்க் பஞ்சல், ஏமாற்றத்தோடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.127 முதல் தரப் போட்டிகளில் சதங்களுடன் 8,856 ரன்களும், 97 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3,672 ர... மேலும் பார்க்க