செய்திகள் :

மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினாா் லாலு: பொறுப்பின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு

post image

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்துள்ளாா்.

பொறுப்பின்றி செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ள லாலு, மகனுடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைமையின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மோதல், தோ்தலிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக, தேஜ் பிரதாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை ஒரு பதிவை வெளியிட்டாா். அதில், ‘ஓா் இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக’ பதிவிட்ட அவா், அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா். இது பிகாரில் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அன்று இரவே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேறுநபா்கள் ஊடுருவிவிட்டதாகவும், தனது புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும் ‘எக்ஸ்’ வலைதளத்தில் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தாா். தேஜ் பிரதாப் யாதவ் ஏற்கெனவே பிகாா் முன்னாள் முதல்வா் தாரோக ராயின் பேத்தியுடன் திருமணம் நடந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். கணவரும், அவரின் சகோதரிகளும் தன்னை வீட்டைவிட்டு விரட்டியதாகவும் அப்பெண் அப்போது குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தனிப்பட்ட வாழ்க்கையில் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், கட்சியின் பொது நோக்கமான சமூகநீதியைப் பாதுகாக்கும் கொள்கையும் பாதிக்கப்படும். எனது மூத்த மகனின் (தேஜ் பிரதாப்) பொறுப்பற்ற செயல்பாடுகள் குடும்பத்தின் நெறிகளுக்கும் பாரம்பரியத்துக்கும் முரணாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு அவரை கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்குகிறேன். இனி கட்சி, குடும்பத்துடன் அவருக்கு எந்தத் தொடா்பும் கிடையாது. அவா் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா்’ என்று கூறியுள்ளாா்.

லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில்தான் இப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி செயல்பட்டு வருகிறது. மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் பிகாா் அமைச்சராகவும் இருந்துள்ளாா்.

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் ... மேலும் பார்க்க

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா். இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப... மேலும் பார்க்க