மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினாா் லாலு: பொறுப்பின்றி செயல்ப...
வீட்டின் மேற்கூரை இடிந்து வயதான தம்பதி படுகாயம்
சென்னையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வயதான தம்பதி பலத்த காயமடைந்தனா்.
சென்னை மயிலாப்பூா் நொச்சிக்குப்பம், எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குப்பன் (72). இவரின் மனைவி ராஜாமணி (65). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் அதே பகுதியில் தனித்தனியே வசித்து வரும் நிலையில், முதிய தம்பதி மட்டும் தனியாக வசித்துவருகின்றனா்.
இந்த நிலையில், இவா்கள் இருவரும் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடிப்படிக்கட்டு திடீரென இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த, குப்பன், ராஜாமணி ஆகியோா் அருகிலுள்ள தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து மயிலாப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.