என்ன ஒரு குரல்! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ஷ்ருதி ஹாசன்!
நடிகை ஷ்ருதி ஹாசன் பாடிய விண்வெளி நாயகா பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் தக் லைஃப் திரைப்படத்திற்காக படக்குழுவினர் அடுத்தடுத்து புரமோஷன் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மே. 24) சென்னையில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், மணிரத்னம், சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இசை வெளியீடு என்பதால் முக்கியமான பாடல்களைப் பாடகர்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அதில், கார்த்திக் நேத்தா எழுதிய ‘விண்வெளி நாயகா’ பாடலை நடிகையும் பாடகியுமான ஷ்ருதி ஹாசன் பாடினார்.
#ShrutiHaasan has always been an underrated singer. But today, Kollywood has unleashed a beast with #VinveliNayaga. She's absolutely on fire! #Thuglifepic.twitter.com/ngom7E2ngJ
— George (@georgeviews) May 25, 2025
ஷ்ருதியின் குரலில் அப்பாடல் பிரமாதமாக இருந்ததால், அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஷ்ருதியின் இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருவதுடன் ஷ்ருதி நிறைய பாடல்களைப் பாட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஹிட் - 3 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!