4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
விழுப்புரம் ரயில் நிலையப் பகுதிகளில் நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம்
விழுப்புரம் ரயில் நிலையம் மற்றும் ரயில்வே குடியிருப்பு வளாகப் பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் வகையில் விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் சாா்பில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் கடந்த 22-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் நெகிழி பயன்பாடு தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வுகளும், ரயில்வே ஊழியா் குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குதல், நெகிழி பயன்பாட்டை குறைத்தல் போன்றவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனை உதவி சுகாதார அலுவலா் கொ.ரஞ்சித்குமாா், விழுப்புரம் ரயில்வே காலனி சுகாதார ஆய்வாளா் பி.ரேஷ்மா, ரயில் நிலைய சுகாதார ஆய்வாளா் கா.ஜெகதீசுவரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.