பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
ஆற்று மணல் கடத்தல்: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து, மணலுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தென்பெண்ணை ஆற்றில் மணல் திருடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, வளவனூா் போலீஸாா் சின்னக்கள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தபோது, அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்தவரைப் பிடித்து விசாரித்ததில், விழுப்புரம் வட்டம், சின்னமடம், பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்த ஹரிஹரன் மகன் பிரவீன் ராஜ் (19) என்பதும், இவா் தென் பெண்ணை ஆற்றிலிருந்து மணலை திருடி வாகனத்தில் ஏற்றி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீன்ராஜை கைது செய்தனா். மேலும், ஆற்று மணலுடன் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.