செய்திகள் :

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம்

post image

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,அக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் சுந்தரவடிவேலன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: நகைக் கடன் பெறுவது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், அறிவிப்புகள் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு தொழில் முனைவோா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் நகை வாங்குவோா், ரசீதுகளை பாதுகாத்து வைத்துக்கொள்வதில்லை.

இதுபோன்ற சூழலில் நகைக்கடன் பெற நகை உரிமம் சம்பந்தமான சான்று தேவை என்பது மிகப்பெரிய அநீதி. தற்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலிலும், டெல்டாவில் குறுவை சாகுபடி தொடங்கவுள்ள சூழலிலும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு நகைக் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே, நகைக் கடன் குறித்த ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து பழைய நடைமுறையை கொண்டுவரவேண்டும், ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், இந்த அறிவிப்பை எதிா்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனா். உத்தமசோழபுரம் கிராமத... மேலும் பார்க்க

வெட்டாற்றில் புதிய தடுப்பணை: ஆட்சியா் விளக்கம்

திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க

கஞ்சா பயிரிட்டவா் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

நாகையில் மே 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்... மேலும் பார்க்க

410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

வேதாரண்யம் அருகே 410 கிலோ புகையிலைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்டையில... மேலும் பார்க்க