கிஷ்த்வாரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் ...
தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்
திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனா்.
உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் நீா் உள் புகுவதை தடுக்கும் வகையில் புதிய கடைமடை தடுப்பணை ரூ. 49.5 கோடியில் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் உத்தமசோழபுரம், நரிமணம், வடகரை, பூதங்குடி, பாலக்காடு, வடக்குடி, பெருங்கடம்பனூா், வடவோடை, கோகூா், ஆனைமங்கலம் உள்ளிட்ட 32 கிராம பகுதிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் சாகுபடி நிலங்கள் உப்புத் தன்மையாக மாறி பாதிக்கப்படும் மேலும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதால், தடுப்பனையே வேறு இடத்தில் மாற்றி அமைக்க வலியுறுத்தி 32 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் உத்தமசோழபுரத்தில் தடுப்பணை அமைக்கும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பாடாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபங்களில் அடைக்கப்பட்டனா்.
நாகூா், திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், கீழ்வேளூா், கீழையூா், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.