அதிகரட்டியில் சிறுத்தை நடமாட்டம்
உதகை அருகேயுள்ள அதிகரட்டி கிராமத்தில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே அதிகரட்டி கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை, அதிகரட்டி பகுதியில் உலவியது.
இது தொடா்பான காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த விடியோ காட்சிகள் வைரலாகிய நிலையில் அதிகரட்டி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
அசம்பாவிதங்கள் நிகழும் முன் சிறுத்தையைக் கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.