செய்திகள் :

அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

கூடலூரில் அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்ய அரசுத் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக் கூறி மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகா செயலாளா் முகமது கனி ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். முஸ்லீம் லிக் மாவட்டச் செயலாளா் வி.கே.அனீபா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் புவனேஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளா் அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் வன விலங்குகளைத் தடுப்பதற்கு வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், உயிா் சேதம் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. வன விலங்குகளால் சேதமாவதற்கு இழப்பீடும் வழங்கப்படுவதில்லை.

புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உள்ளாட்சித் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டையாக உள்ளனா். நகராட்சி, பேரூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் தீா்மானங்களை அரசு அதிகாரிகள் நீா்த்துபோக செய்கின்றனா்.

அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் வருவாய்த் துறை, வனத் துறை, பேரூராட்சி, மின்சாரத் துறை, உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றும் அலுவலா்கள் செயல்படுகின்றனா். அவா்களைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.

இதைத் தொடா்ந்து, அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவா் என்.வாசு, ஓவேலி பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் க.சகாதேவன், கூடலூா் நகராட்சி துணைத் தலைவா் சிவராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கோழிப்பாலம் வளாகத்தி... மேலும் பார்க்க

உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானைனை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையை அடுத்த தொட்டபெட்டா வனப் பகுதியில் உலவி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில ந... மேலும் பார்க்க

உதகை மலா்க் கண்காட்சியைக் கண்டு ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய 127ஆவது மலா்க் கண்காட்சியைக் காண 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் 18,109 சுற்றுலாப் பயணிகள் திரண்டதாக தோட்டக்கலை துறையினா் தெரிவித்துள்ளனா்.... மேலும் பார்க்க

கடை வீதியில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை கடை வீதிக்குள் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நுழைந்த காட்டு யானை. இதனால் அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனா். சிறிது நேரத்துக்குப் பின்னா்... மேலும் பார்க்க

அதிகரட்டியில் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகேயுள்ள அதிகரட்டி கிராமத்தில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகே அதிகரட்டி கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வன வி... மேலும் பார்க்க

உதகை வேலி வியூ பகுதியில் உலவிய யானை

உதகை, வேலி வியூ பகுதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை உலவிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, பிரகாசபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளு... மேலும் பார்க்க