செய்திகள் :

சாக்கடைக்கு அடியில் இப்படி ஓர் இடமா? - இரண்டாம் உலகப் போரிலிருந்த இடத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்!

post image

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இருந்த ஒரு ரகசிய நிலத்தடி மருத்துவமனையை ஜெர்மனை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜெர்மன் ஆய்வாளரான கார்ஸ்டன் ராபர்ட் என்பவர் கைவிடப்பட்ட மற்றும் மர்மமான இடங்களுக்கு சென்று அந்தப் பகுதி குறித்து ஆவணப்படுத்துவார்.

அவரின் வீடியோக்கள் அனைத்தும் தனித்து விடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட இடங்கள் குறித்தும் பகுதி குறித்தும் விளக்கப்படுவதாக இருக்கிறது.

கைவிடப்பட்ட திரையரங்கம், நிலத்தடியில் இருக்கும் பழைய தேவாலயம், கைவிடப்பட்ட அமானுஷ்ய மருத்துவமனை என பல பகுதிகளை குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் நிலத்துக்கு அடியில் இருக்கும் ஒரு மாறுபட்ட மறைக்கப்பட்ட இடம் குறித்து வெளியிட்டு இருந்தார்.

இரண்டாம் உலகப்போருக்கு முந்தையதாக இருந்த ஒரு நிலத்தடி மருத்துவமனை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.

கார்ஸ்டன் ஒரு நடைபாதை வழியாக சென்றபோது, ​​ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட ஒரு வார்த்தையைக் கண்டார். அங்கு ஆங்கிலத்தில் "இரத்த வங்கி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை ஆராய்ந்த அவர், ஒரு நிலத்தடி மருத்துவமனை கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறார்.

அந்த வீடியோவில் மருத்துவமனையின் பல அறைகள், அங்கு சிதறி கிடக்கும் பொருள்கள், முன்பு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை தனது கைகளில் வைத்திருக்கும் விளக்கு கொண்டு காண்பிக்கின்றார்.

இந்த வீடியோ 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு பயனர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சாக்கடைக்கு அடியில் இப்படி ஒரு வித்தியாசமான இடத்தை கண்டுபிடித்ததாக அவர் கூறியது பலரையும் ஆச்சரியத்திலும் சந்தேகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு, வருமானம் எவ்வளவு தெரியுமா?

வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் வருமானம் குறித்தும், எப்படி வருமானம் ஈட்டப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.மறைந்த போப் பிரான்ஸ் தனது பதவி காலத்தின் தொடக்கத்தில் இருந்து நிதி சார்ந... மேலும் பார்க்க

காட்டிக்கொடுத்த வீடியோ; பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தாரா ஹரியானா பெண்? கைது செய்யப்பட்ட பின்னணி

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோதி சொந்தமாக Travel With Jo என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்தியாவில் உளவு பார்த்து முக்கிய... மேலும் பார்க்க

கர்நாடகா: மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன்; சில நிமிடத்தில் துக்க வீடாக மாறிய திருமண வீடு

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் அருகில் உள்ள ஜம்கந்தி என்ற இடத்தில் பிரவின் என்பவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.திருமண ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்தன. மணமகன் மற்றும் மணமகள் என இரண்... மேலும் பார்க்க

குடியிருப்புக்குள் நுழைந்து இரைதேடிய இரண்டு சிறுத்தைகள்; பதற வைக்கும் காட்சி; எச்சரிக்கும் வனத்துறை

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகு... மேலும் பார்க்க

மும்பை: ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்; அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி; மருத்துவர்கள் சொல்வது என்ன?

பொதுவாக இரட்டை குழந்தைகள் ஒட்டிப் பிறப்பது மிகவும் அபூர்வம். அதுவும் ஒரு லட்சம் குழந்தை பிறந்தால் அதில் ஒரு குழந்தை மட்டுமே இது போன்று பிறக்க வாய்ப்பு இருக்கிறது. மும்பையில் ஏற்கனவே கடந்த 13 ஆண்டுக்கு... மேலும் பார்க்க

இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்... ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர்.... மேலும் பார்க்க