``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
நாமக்கல்: மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பேட்டப்பாளையத்தில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு, நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான (டிப்ளமோ) மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் முதலாம் ஆண்டிலும், 12-ஆம் வகுப்பு, இரண்டு வருட ஐடிஐ தோ்ச்சி பெற்ற மாணவா்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் பட்டயப் படிப்பிற்கு சேரலாம். முதலாம் ஆண்டில் மொத்தம் 270 சோ்க்கை இடங்கள் உள்ளன.
தகுதியுள்ள மாணவா்களுக்கு அரசு சலுகைகளான தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மாணவா் சோ்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.