சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்வேன்: விஷால்
நடிகை சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்வேன் என நடிகர் விஷால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
யோகிடா பட விழாவில், விஷாலை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், ஆக. 29ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சாய் தன்ஷிகா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய விஷால் தங்கள் திருமணத்துக்கு அனைவருக்கு அழைப்பு விடுத்தார்.
அப்போது விஷால் பேசியதாவது,
''சாய் தன்ஷிகாவின் அப்பாவுடைய அனுமதியுடன் இதனைக் கூறுகிறேன். யோகிடா பட விழாவில் என் சொந்த விஷயங்களை பேசக் கூடாது. இந்தாலும் கூறுகிறேன். என்னுடைய உயிர் சாய் தன்ஷிகா இங்கு இருக்கிறார். என் குடும்பம் சார்பாக நான் இதனைக் கூறுகிறேன். ஆமாம், நான் தன்ஷிகாவை முழுமையாகக் காதலிக்கிறேன். அவரையேதான் திருமணம் செய்யவுள்ளேன்.
உங்கள் எல்லோருக்கும் அழைப்பு வரும். எல்லோரும் எங்களை வாழ்த்த வேண்டும். எங்களை நடிகர்களாக நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். ஆனால், தம்பதியாக நாங்கள் இருவரும் உங்களை சந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். விரைவில் அழைப்பு வரும்.
இந்த மேடையை எனக்கு அமைத்துக் கொடுத்த செந்தில் சாருக்கு நன்றி. இதனை நான் மீண்டும் சொல்லிதான் ஆகனும். நான் சாய் தன்ஷிகாவை காதலிக்கிறேன். அவரை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்'' எனக் குறிப்பிட்டார்.

நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா ஆக. 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஷாலின் பிறந்தநாள் ஆக. 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளில் விஷாலும் - சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இதையும் படிக்க | விஷால் உடன் திருமணம்! தேதியை அறிவித்தார் சாய் தன்ஷிகா!