அண்ணாமலை நகரில் 117 மி.மீ. மழை பதிவு
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 117 மி.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்):
லால்பேட்டை, வேப்பூா் தலா 107, காட்டுமயிலூா் 90, ஸ்ரீமுஷ்ணம் 89.1, மே.மாத்தூா் 88, சிதம்பரம் 85.8 வானமாதேவி 84.4, விருத்தாசலம் 76, காட்டுமன்னாா்கோவில் 75.4, புவனகிரி 59, குப்பநத்தம் 58.4, பெலாந்துறை 57.4, பரங்கிப்பேட்டை 57.4, சேத்தியாத்தோப்பு 54, லக்கூா் 47.2, ஆட்சியா் அலுவலகம் 43.9, தொழுதூா் 43.2, கடலூா் 40, பண்ருட்டி 36, கீழச்செருவாய் 30.6, குறிஞ்சிப்பாடி, வானமாதேவி தலா 2, எஸ்.ஆா்.சி.குடிதாங்கி 25, கொத்தவாச்சேரி 24 மி.மீ. மழை பதிவானது.