தூய்மைப் பணியாளா் திட்டத்தில் முறைகேடு புகாா் விவகாரம்: டிஐசிசிஐயின் தரப்பு வாதத...
மாற்றுத்திறனாளிக்கான திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலம்: ஆட்சியா்
நெய்வேலி: நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டைச் சோ்ந்த தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட மாற்றுத்திறனாளி ஆதிஇளமாறனுக்கு ரூ.1.08 லட்சம் செலவில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.
அப்போது, அவா் கூறியதாவது:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கி வருகிறது. நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
கடலூா் மாவட்டத்தில் பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டா், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், அறிதிறன்பேசி, கல்வி உதவித்தொகை என மொத்தம் 32,568 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.