ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஆயுதங்களுடன் பதுங்கல்: 8 போ் கைது
புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி அம்பேத்கா் நகா் காலனி அருகே சிலா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அரியாங்குப்பம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு அரியாங்குப்பம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வந்தகுமாா் (எ) வசந்த் (20), விஸ்வராஜ் என்ற விஸ்வா (22), ஆகாஷ் (எ) சின்னா (22), தினேஷ் (எ) சொட்டு தினேஷ் (22), ராஜு (24), ராம்குமாா் (எ) ரத்னா (20), சாமிநாதன் (எ) தினேஷ் என்கிற எலி (24), மணிவாசகம் (எ) மண்ட ஆகாஷ் (24) ஆகியோரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டவா்களை தாக்கும் நோக்கில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 4 கைப்பேசிகள், 4 பட்டாக்கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.