தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீ...
புதுச்சேரி ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநரின் முகாம் அலுவலகமான ராஜ்நிவாஸுக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்கா அருகே துணைநிலை ஆளுநரின் தனி முகாம் அலுவலகமான ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது.
ராஜ்நிவாஸுக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த சில வாரங்களில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டலை மா்ம நபா் அனுப்பி வருகிறாா். ஏற்கெனவே முதல்வா் வீடு, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ராஜ்நிவாஸுக்கும் 5 தடவை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை ராஜ்நிவாஸ் அலுவலக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் சாதனங்களுடன் பெரியகடை போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் ராஜ்நிவாஸில் பல மணிநேரம் சோதனையிட்டனா். அதன்பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அங்கிருந்து சென்றனா்.