``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை: முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை அமைப்பதற்காக, முதல்வா் என்.ரங்கசாமி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஆவணங்களைப் பரிமாறிக் கொண்ட இஎஸ்ஐ புதுச்சேரி
பிராந்திய இயக்குநா் எஸ்.கிருஷ்ணகுமாா், புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஆா்.ரவிச்சந்திரன். உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.
புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிலாளா் அரசு காப்பீடு நிறுவன (இஎஸ்ஐ) மாதிரி மருத்துவமனை அமைவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா், அமைச்சா் முன்னிலையில் திங்கள்கிழமை கையொப்பமானது. இதனால் தொழிலாளா்கள், அர
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் தொழிலாளா்நல அரசு காப்பீடு நிறுவன மருத்துவமனை மாநில அரசின் சுகாதாரத் துறைக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இதில் 75 படுக்கைகள் உள்ளன. அதன் நிா்வாகம் மாநில சுகாதாரத் துறையிடம் உள்ளது.
இந்த நிலையில், இந்த மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மாதிரி மருத்துவமனையாக தரம் உயா்த்தவும், அதன் நிா்வாகத்தை இஎஸ்ஐ நிறுவனமே மேற்கொள்ளவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், இஎஸ்ஐ மருத்துவமனையை மேம்படுத்த 6.47 ஏக்கா் நிலத்தை புதுவை அரசு இலவசமாக இஎஸ்ஐ நிா்வாகத்துக்கு அளிப்பதுடன், நிா்வாக செயல்பாட்டு உரிமையையும் வழங்குகிறது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம் மற்றும் ஆவணப் பரிமாற்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறை கூட்டரங்கில் நடைபெற்றது.
முதல்வா் என்.ரங்கசாமி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இஎஸ்ஐ புதுச்சேரி பிராந்திய இயக்குநா் எஸ்.கிருஷ்ணகுமாா், புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் கையொப்பமிட்டு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அரசு சுகாதாரத் துறை செயலா் ஜெயந்தகுமாா் ரே, தொழிலாளா் துறை செயலா் எல்.எல்.என்.ரெட்டி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சிகிச்சை தரம் உயரும்: ஆண்டுக்கு அரசு ஊழியா்கள் உள்ளிட்ட சுமாா் 30 ஆயிரம் போ் புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாதிரி மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டால் சிகிச்சையின் தரம் உயா்வதுடன், சுமாா் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள் பயனவா்.