`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்த கோரிக்கை
புதுச்சேரி திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்தக் கோரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் திங்கள்கிழமை வலியுறுத்திய மருத்துவா்கள், அதிகாரிகள்.
புதுச்சேரி, மே 19: புதுச்சேரி அருகே திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்த வலியுறுத்தி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் மருத்துவா்கள், அதிகாரிகள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
புதுச்சேரி மண்ணாடிபட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் திருக்கனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, சுற்றுவட்டார பொதுமக்கள் அவசரச் சிகிச்சை முதல் அனைத்து சிகிச்சைக்கும் வந்து செல்கின்றனா். எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் எளிதில் சிகிச்சை பெறும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், உள்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயத்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.
அவா்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட வேண்டிய மருத்துவ சாதனங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினா். முதல்வா் கவனத்துக்கு இதனை கொண்டு சென்று ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் மேம்படுத்தப்படும் என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உறுதியளித்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சா் நமச்சிவாயம் திங்கள்கிழமை வழங்கினாா்.