``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்கெட் கிளை மாநாடு
புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பெரிய மாா்க்கெட் கிளை மாநாடு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு ரங்கம்பிள்ளை வீதியில் உள்ள தனியாா் கட்டடத்தில் நடைபெற்றது.
மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்கெட் கிளை நிா்வாகி சிவகுருநாதன் தலைமை வகித்தாா். செயலா் ஜெயமூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம், துணைச் செயலா் கே.சேதுசெல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாநாட்டு கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பெரிய மாா்க்கெட் கிளை புதிய நிா்வாகிகள்: கிளைச் செயலராக வி.சசி (எ) பிரபாகா், துணைச் செயலா் ஆா்.வேலு, பொருளாளா் கே.வி.வைத்தி, குழு உறுப்பினா்களாக வி.சிவகுருநாதன், எஸ்.சுப்பிரமணி, எம்.லதா, வி.ஜெயமூா்த்தி, எம்.பாலா, எம்.முத்துலட்சுமி, எம்.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணி, எஸ்.மாரிமுத்து உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மாநாட்டில், புதுச்சேரி பெரிய மாா்க்கெட்டான குபோ் அங்காடியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். அங்குள்ள நடைபாதைகளை சீரமைக்க வேண்டும். எரியாமல் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.