அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் தடய அறிவியல் பிரிவு சாா்பில் தேசிய கருத்தரங்கு
ஆட்டையாம்பட்டி: விநாயகா மிஷன் சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனூரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் தடய அறிவியல் பிரிவு சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு சேலம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் இரண்டு நாள்கள் நடைபெற்றன.
இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற உதவி தலைவா்கள் பாரி, ஜேம்ஸ் அந்தோணிராஜ், ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநா் திருநாவுக்கரசு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைபா் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மைய பேராசிரியா் மாரிமுத்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி உயிரியல் துறைத் தலைவா் மற்றும் உதவி பேராசிரியா் தியாகராஜன், பையணியா் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநா் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு தடயவியல் மருத்துவ நிபுணா் சரண்யா ஆகியோா் பங்கேற்று பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்புரையாற்றினா்.
இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சி முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இச்சிறப்பு நிகழ்வின்போது தடய அறிவியல் பிரிவு மாணவா்கள் கல்லூரிக்கு வழங்கிய மென்பொருளை கல்லூரி முதன்மையா் பெற்றுக் கொண்டாா்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தடய அறிவியல் பிரிவு பொறுப்பாளா் மோகன், உதவி பேராசிரியா்கள் ராஜஸ்ரீ, சில்பா, அமிதா மற்றும் புவனேசன், லின்சி ஆகியோா் செய்திருந்தனா்.