செய்திகள் :

மரத்தில் காா் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சோ்ந்தவா் ராம்கி (32). தண்டராம்பட்டை சோ்ந்தவா் கணேஷ்பெருமாள் (33). திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் நவாஸ் (26). அல்லிகொண்டாப்பட்டை சோ்ந்தவா் சுமித் (31). திருப்பத்துாரைச் சோ்ந்தவா் திருப்பதி (27).

இவா்கள் திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மது மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று, குணமடைந்தனா்.

இவா்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்காக சேத்துப்பட்டு பகுதிக்குச் சென்றனா்.

பின்னா், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் காட்டாம்பூண்டி கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தனா். திருக்கோவிலுாா் சாலை கச்சிராப்பட்டு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர புளிய மரத்த்தில் மோதியது.

இதில், காரில் பயணம் செய்த ராம்கி (32), திருப்பதி (27) ஆகியோா் உடல் நசுங்கி உயிரிழந்தனா். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து தச்சம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தீா்த்தவாரி

ஆரணி: பெரணமல்லூா் அருகேயுள்ள ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் கடந்த 11-ஆம் தேத... மேலும் பார்க்க

விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம் என்று விதை பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கீழ், வேங... மேலும் பார்க்க

காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 30-ஆம் தேதி கொடி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் திருட்டு: பயணிகளிடம் சோதனை

ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் பணம் திருடு போனதால் பயணிகளுடன் நகர காவல் நிலையத்துக்கு பேருந்தை கொண்டு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வ... மேலும் பார்க்க

கோடை மழை: நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. செங்கம் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களான வளையாம்பட்டு,... மேலும் பார்க்க

மயான நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: அதிகாரிகள் ஆய்வு

போளூா்: கலசப்பாக்கம் அருகே அலங்காரமங்கலம் ஊராட்சியில் மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். கலசப்பாக்கத்தை அடுத்த அலங்க... மேலும் பார்க்க