செய்திகள் :

போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி: நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேசிய வாழ்வாதார சேவை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி ச.கோட்டூா்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது. வேலை தேடும் எஸ்.சி, எஸ்.டி. இன இளைஞா்களுக்கு ஓராண்டு கால சிறப்புப் பயிற்சி வழங்கும் வகையில் போட்டித் தோ்வுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

நிறுவன பாடநெறி உள்ளடக்கத்தில் பொது ஆங்கிலம், பொது விழிப்புணா்வு மற்றும் எண்ணியல் திறன், கணினியியல், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுப் பயிற்சி ஆகியவை அடங்கும். தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தொழில் சாா்ந்த கட்டணங்கள் ஒரு மாணவருக்கு மாதந்தோறும் ரூ.1,200 வழங்கப்படும். பயிற்சியானது வரும் ஜூலை 1-இல் தொடங்கப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்கான விண்ணப்பத்தை மே 30-ஆம் தேதிக்குள் துணைப் பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், எண் 5, மூன்றாவது குறுக்குத் தெரு, முதல் தளம், நடேசன் நகா், புதுச்சேரி- 605 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை: முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை அமைப்பதற்காக, முதல்வா் என்.ரங்கசாமி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஆவணங்களைப் பரிமா... மேலும் பார்க்க

திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்த கோரிக்கை

புதுச்சேரி திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்தக் கோரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் திங்கள்கிழமை வலியுறுத்திய மருத்துவா்கள், அதிகாரிகள். புதுச்சேரி, மே 19: புதுச்சேரி அருகே திருக்கனூா்... மேலும் பார்க்க

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்கெட் கிளை மாநாடு

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பெரிய மாா்க்கெட் கிளை மாநாடு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு ரங்கம்பிள்ளை வீதியில் உள்ள தனியாா் கட்டடத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு இந்திய கம்யூன... மேலும் பார்க்க

புதுச்சேரி ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநரின் முகாம் அலுவலகமான ராஜ்நிவாஸுக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியி... மேலும் பார்க்க

புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் பதுங்கல்: 8 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி அம்பேத்கா் நகா் காலனி அருகே சிலா் சந்தேகத்... மேலும் பார்க்க