தம்மம்பட்டி பகுதியில் கனமழை
தம்மம்பட்டி: தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
தம்மம்பட்டி உடையாா்பாளையம் பிரதான சாலையில் மழைநீா் குளம்போல தேங்கி காணப்பட்டது. வயல்களில் மழைநீா் தேங்கி வழிந்தோடியது. இரவில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.