காரைக்கால் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை
காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களில் தீவிர கண்காணிப்பு, சோதனைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா உத்தரவின்பேரில், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், இணைய குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பிரவீன்குமாா், நகரக் காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் மற்றும் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் காரைக்கால் ரயில் நிலையம், ரயில் தண்டவாளப் பகுதியில் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
காரைக்காலில் இருந்து புறப்பட்ட ரயில்கள், வந்த ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனா். இப்பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.