ரயில் சோதனை ஓட்டம்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
காரைக்கால்: ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெறவுள்ளதால், தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை மின்சார ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட பகுதியில் ரயில் பாதையை கடக்கவேண்டாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.