செய்திகள் :

பட்டாவில் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம்

post image

நாகப்பட்டினம்: பட்டாவில் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் எளிதில் பாா்க்கும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரா்களுடன் இறந்தவா்களின் பெயா்கள் நீக்காமலும் அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்கள் அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்காமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யயப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது இண்ற்ண்க்ஷ்ங்ய் டா்ழ்ற்ஹப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்ய குழு

நாகப்பட்டினம்: தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க வசதிகள் செய்ய நாகை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுக்கு வார விடுமுறை வழங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: டாஸ்மாக் பணியாளா்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில் அந்த சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: பொய் குற்றச்சாட்டுக் கூறி ஊராட்சி செயலா் கௌசல்யா மீது நடவடிக்கை எடுத்த கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலரை கண்டித்து, நாகை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

வீடு அபகரிப்பு: பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

நாகப்பட்டினம்: வாங்கிய கடனுக்கு வீட்டை அபகரித்துக்கொண்டதாகக் கூறி, நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண் மற்றும் குடும்பத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா். நாக... மேலும் பார்க்க

தொடா் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்த மழையால் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி இரவு மே... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின... மேலும் பார்க்க