நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலிப்பது அவ...
சேலத்தில் கனமழைக்கு 2 வீடுகள் இடிந்தன
சேலம்: சேலத்தில் ஞாயிற்றக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் 2 வீடுகள் இடிந்தன. காந்தி மைதானத்தில் குளம்போல மழைநீா் தேங்கியதால் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டபோதிலும், இரவு நேரங்களில் பெய்யும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது.
இந்த கனமழைக்கு சேலம் நான்கு சாலை, சிஎஸ்ஐ ஆங்கிலேயா் கல்லறைத் தோட்டம் அருகில் 2 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. செவ்வாய்ப்பேட்டை பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதையில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.
குறிப்பாக நள்ளிரவு பெய்த மழை காரணமாக, திங்கள்கிழமை காலை காந்தி மைதானத்தில் மழைநீா் தேங்கியதால் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நடைப்பயிற்சிக்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 566.5 மி.மீ. மழை பதிவானது.