வீரகனூரில் விஷம் குடித்த தம்பதி உயிரிழப்பு
தம்மம்பட்டி: வீரகனூா் அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த தம்பதி உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், வீரகனூரை அடுத்த லத்துவாடி கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (49). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (44). இவா்களுக்கு இடையே கடந்த 12-ஆம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் விஷம் அருந்தினா். இதையடுத்து இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தமிழ்ச்செல்வி ஞாயிற்றுகிழமை இரவும், முருகன் திங்கள்கிழமை மாலையும் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் குறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.