சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்
சேலம்: சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 5 நாள்களும் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். மறுமாா்க்கத்தில், சேலத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். இருமாா்க்கத்திலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை 20 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.