இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் மரணம்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே குளத்தி மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மகன் தரணிதரன்(13) பு.முட்லூா் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறை என்பதால், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு தரணிதரன் சென்றாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றாா். மீண்டும் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடினா். மேலும், அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளா் கே,அம்பேத்கா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கவரப்பட்டு கிராம குளத்தில் தரணிதரன் உடல் மிதந்தது தெரிய வந்தது. விளையாடும் போது தவறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.