ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
நெய்வேலியில் திமுக தொகுதிச் செயல்வீரா்கள் கூட்டம்!அமைச்சா்கள் கே.என்.நேரு, சி.வெ.கணேசன் பங்கேற்பு!
கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில், 2026 ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், நெய்வேலி வட்டம் 25 பகுதியில் உள்ள தொமுச அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மேற்கு மாவட்டச் செயலரும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் தலைமை வகித்தாா். நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், கடலூா் மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டும் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். மதுரையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கடலூா் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும்.
ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதியின் 101-ஆவது பிறந்த நாளை அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.
முன்னதாக, கடலூா் மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்த திமுக தலைமை நிா்வாகிகளிடம் அமைச்சா் கே.என்.நேரு சட்டப் பேரவைத் தொகுதி நிலவரம் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் டாக்டா் நந்தகோபாலகிருஷ்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ராசவன்னியன், பொதுக்குழு உறுப்பினா் புகழேந்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.