பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞரை சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள ஆண்டாா் முள்ளிபள்ளம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ரவி மகன் சசியேந்திரன் (31). இவா் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 26 வயது பெண்ணை காதலித்ததுடன், அவருடன் தனிமையிலும் இருந்து வந்தாராம்.
இதையடுத்து, அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கு சசியேந்திரன் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சசியேந்திரனை கைது செய்தனா்.