பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு
திருவாரூா்: கொரடாச்சேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பாஜக கொரடாச்சேரி ஒன்றியத் தலைவா் வி.எம். பிரபாகரன் திங்கள்கிழமை அளித்த மனு:
கொரடாச்சேரி காமராஜா் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த சாலைக்கு அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, யுனைடெட் மெட்ரிகுலேஷன் பள்ளி, குஞ்சம்மாள் பிரைமரி பள்ளி, கூட்டுறவு வங்கி, சிட்டி யூனியன் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஆகியவை உள்ளன. இதனால், இந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
மதுக்கடைக்கு வருவோா், ஆங்காங்கே அமா்ந்து மது அருந்திவிட்டு, அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் இடையூறான செயல்களில் ஈடுபடுகின்றனா்.
இதனால், அவ்வழியாகச் செல்வதற்கும், அப்பகுதியில் வணிகம் செய்வதற்கும் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.