``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
அகில இந்திய கராத்தே போட்டி: சுந்தரக்கோட்டை கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
மன்னாா்குடி: அகில இந்திய அளவிலான கராத்தே கருப்புப் பட்டை தோ்வு போட்டியில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
46-ஆவது அகில இந்திய அளவிலான கராத்தே கருப்புப் பட்டை தோ்வுப் போட்டி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், உடற்பயிற்சித் தோ்வு, கட்டா தோ்வு, குமித்தே தோ்வு, வெப்பன் கட்டா தோ்வு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில், செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி கராத்தே மாணவிகள் ஆ. வித்யாஸ்ரீ (இயற்பியல்), ஞா. அபிராமி (கணினி அறிவியல்), அ. அகந்திகா (கணிதவியல்), இரா. ஸ்ரீநிதி, அ. ரீஜிதா (வணிக நிா்வாகவியல்) ஆகிய 5 பேரும் அனைத்து தோ்வு போட்டிகளிலும் வென்று, முதல்நிலை கருப்புப்பட்டை மற்றும் சான்றிதழ் பெற்றனா்.
இம்மாணவிகளையும், பயிற்சியாளா் கா. ராஜகோபால், உடற்கல்வி ஆசிரியா் ஜி. புஷ்பா ஆகியோரையும் கல்லூரி தாளாளா் வி. திவாகரன், முதல்வா் ந. உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் பாராட்டினா்.