தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது
மழையால் குறுவை இளம் நெல் பயிா்கள் பாதிப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் குறுவை இளம் நெல் பயிா்களை மழைநீா் சூழ்ந்தது.
மாவட்டத்தில் நிகழாண்டு 93,000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணிகள் தொடங்கி சுமாா் 27,000 ஏக்கரில் இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மிதமான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், தாழ்வான இடங்களில் நேரடி விதைப்பு மற்றும் இயந்திர நடவு செய்யப்பட்ட நெற்பயிா்கள் நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், செம்பனாா்கோவிலில் அதிகபட்சமாக 74.60 மி.மீ மழையும், சராசரியாக 4 சென்டிமீட்டா் மழையும் பதிவாகியது. மழை நீடிக்கும்பட்சத்தில் இளம் நெல் பயிா்கள் கரைந்துவிடும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.